என் மலர்
செய்திகள்

ஜோரூட் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் - இந்தியா பேட்டிங்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
லீட்ஸ்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா 2. கே.எல்.ராகுல் 3. புஜாரா 4. ரகானே 5. விராட் கோலி 6. ரிஷப் பண்ட் 7. ஜடேஜா 8. முகமது சமி 9. பும்ரா 10. சிராஜ் 11. இஷாந்த் சர்மா
இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:-
1. ரோரி பர்ன்ஸ் 2. ஹசீப் ஹமீட் 3. டேவிட் மாலன் 4.ஜோ ரூட் 5. ஜானி பேர்ஸ்டோ 6.ஜோஸ் பட்லர் 7.மொயீன் அலி 8.சாம் கரன் 9.கிரேக் ஓவர்டன் 10.ஒல்லி ராபின்சன் 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்
Next Story






