என் மலர்
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - இந்திய பந்து வீச்சாளர்கள் மீண்டும் சாதிப்பார்களா?
நாட்டிங்காம்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்தது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 95 ரன் கூடுதலாகும்.
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி 84 ரன்னும், ஜடேஜா 56 ரன்னும் எடுத்தனர். ராபின்சன் 5 விக்கெட்டும் , ஆண்டர்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
95 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4 -வது நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது.
இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முதல் இன்னிங்சில் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அதே நேரத்தில்இந்த டெஸ்டில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு இருந்தது.






