search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல்
    X
    டிஎன்பிஎல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் 19-ந்தேதி சென்னையில் தொடக்கம்

    2021-ம் ஆண்டு டி.என்.பி.எல். தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது.
    8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 5-வது   டி.என்.பி.எல். கிரிக்கெட் வருகிற 19-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சுடன் மோதுகிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 20-ந்தேதி எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து 24-ந்தேதி நெல்லை ராயல் கிங்சையும், 28-ந்தேதி சேலம் ஸ்பார்டன்சையும், ஆகஸ்டு 1-ந்தேதி திண்டுக்கல் டிராகன்சையும், 4-ந்தேதி மதுரை பாந்தர்சையும், 6-ந்தேதி கோவை கிங்சையும், 8-ந்தேதி திருச்சி வாரியர்சையும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்திக்கிறது.

    ‘2021-ம் ஆண்டு டி.என்.பி.எல். தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு 9-ந்தேதி முதல் அணியினர் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்க உள்ளனர்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்தார்.
    Next Story
    ×