என் மலர்
செய்திகள்

பட்லர்
இலங்கைக்கு எதிரான போட்டி - காயம் காரணமாக பட்லர் விலகல்
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பட்லர் முதல் போட்டியில் காயம் அடைந்தார். இந்த காயம் காரணமாக நேற்றைய போட்டியில் அவர் ஆடவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி 20 ஒவர் போட்டி இன்று நடக்கிறது.
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பட்லர் முதல் போட்டியில் காயம் அடைந்தார். இந்த காயம் காரணமாக நேற்றைய போட்டியில் அவர் ஆடவில்லை. இந்த நிலையில் அவர் எஞ்சிய 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இருந்து விலகி உள்ளார். ஒருநாள் போட்டிகள் வருகிற 29, ஜூலை 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
பட்லர் விளையாடாததால் டேவிட் மலன் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story






