search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    ஒன்றாக இணைந்து முன்னோக்கி பயணிக்கிறோம்: விராட் கோலி டுவீட்

    அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பார்கள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும் என விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    தோல்விக்குப்பின் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து மீண்டும் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். அணியை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்போம். ஒரே மாதிரியான அணியைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர மாட்டோம்.

    அடுத்த திட்டத்துக்காக ஒரு வருடம் வரை காத்திருக்கமாட்டோம். எங்கள் ஒயிட் பால் அணியில் ஏராளமான வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தயாராகவும், நம்பிக்கையுடனும் உள்ளார்கள். அதேபோல் டெஸ்ட் அணியையும் தயார் செய்ய வேண்டும்.

    அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பாரக்ள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணிக்குக் கொண்டு வர வேண்டும்’’ என விமர்சனம் செய்திருந்தார்.

    இதனால் இந்திய அணியில் அதிரடி மாற்றம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் டுவிட்டரில் ‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம். ஒன்றாக இணைந்து நாங்கள் முன்னோக்கி பயணிக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    மேட்ச் முடிந்த உடன் கடுமையான வகையில் விமர்சனம் செய்துவிட்டு, டுவிட்டரில் கூலாக ஒன்றாக பயணிக்கிறோம் என விராட் கோலி தெரிவித்துள்ள நிலையில், அவர் என்ன சொல்ல வருகிறார்? என்பதை தெளிவாக புரிய முடியாமல் ரசிகர்கள் உள்ளனர்.
    Next Story
    ×