search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கடேஷ் பிரசாத்
    X
    வெங்கடேஷ் பிரசாத்

    ஆடுகளம் பெரிய விசயமே அல்ல: இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும்- வெங்கடேஷ் பிரசாத்

    பேட்டிங் அல்லது வேகப்பந்து வீச்சுக்கு (சீமிங்) சாதகமான ஆடுகளமாக இருந்தால் இந்தியாவின் கையே ஓங்கும் என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஆடுகளம் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றன. ஆனால், இந்தியாவையும் குறைந்து மதிப்பிட முடியாது எனவும் தெரிவிக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆடுகளம் பெரிய விசயம் அல்ல. இந்திய அணி அறிமுக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற வேண்டும். அதற்கு காரணங்கள் உள்ளன என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் ‘‘இரண்டு சிறந்த அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கின்றன. இந்திய அணியில் எராளமான ஆப்சன் உள்ளது. பெஞ்ச் (11 பேர் தவிர வெளியில் இருக்கும் வீரர்கள்) மிகப்பெரிய வலிமையாக உள்ளது.


    பேட்டிங் அல்லது சீமிங் பிட்ச் ஆக இருந்தால், இந்தியாவின் கை ஓங்கும். 1990, 2000-த்தில் இரண்டு சிறந்த சீம் பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். ஆனால், 3-வது மற்றும் 4-வது வீரர்கள் இருக்கமாட்டார்கள்.

    ஆனால் தற்போதைய அணி அதில் வலுவாக உள்ளது. சிறந்த ஆல்-ரவுண்டர்களையும் பெற்றுள்ளது. நாம் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை பெற்றிருப்போம். தற்போது, நாம் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் பெற்றுள்ளோம்.

    விராட்  கோலி- கேன் வில்லியம்சன்

    350 ரன்களுக்கு மேல் குவிக்கும் வல்லமை பெற்றுள்ளோம். தற்போது நாம் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டோர். இதனால் என்ன மாதிரியான ஆடுகளம் தயார் செய்வார்கள் என்பது விசயம் அல்ல. எல்லா வழிகளிலும் இந்தியா விளையாட வேண்டும்.


    அஷ்வின், ஜடேஜாவுடன் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்குவது சிறந்த காம்பினேசனாக இருக்கும். பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மாவுக்கு மாறுபட்ட சீதோஷ்ணநிலை கொண்ட இடத்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. அவர்களின் பணி என்ன என்பது அவர்களுக்கு தெளிவாக தெரியும்’’ என்றார்.
    Next Story
    ×