search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டு பிளிஸ்சிஸ்
    X
    டு பிளிஸ்சிஸ்

    ஐபிஎல்- பாகிஸ்தான் சூப்பர் லீக்: டு பிளிஸ்சிஸ் ஒப்பீடு

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டு பிளிஸ்சிஸ், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஏராளமான வேகப்பந்து வீச்சாளர்களை காண முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் டு பிளிஸ்சிஸ். சிறப்பாக பேட்டிங் செய்து வரும் டுபிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார்.

    இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கொரோனா தொற்றால் பாதி ஆட்டங்களுடன் பிஎஸ்எல் நிறுத்தப்பட்டது. வருகிற 9-ந்தேதி மீதமுள்ள போட்டி தொடங்குகிறது, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

    டு பிளிஸ்சிஸ் இந்தப் போட்டியில் விளையாடுகிறார். அவர் இரண்டு தொடரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் தரம் சிறப்பாக உள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் என்னை ஈர்க்கும் வகையில் பந்து வீசி வருகிறார்கள் என்பதை என்னால் கட்டாயமாக சொல்ல முடியும். என்னைப் போன்று தென்ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்கள் வேகப்பந்து வீச்சை பார்த்து வளர்ந்திருப்பார்கள். ஏராளமான வீரர்கள் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுவது என் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

    இந்தியாவில் ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில், ஏராளமான விதவிதமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    ஐபிஎல் தொடர் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. பயோ-பபுள் பாதுகாப்பானது என்று கருதினோம். அதில் எந்த பிரச்சினையும் வரவில்லை. அதன்பின், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விளையாடுவதற்காக செல்லும்போது, சற்று இடைவெளி கிடைக்க, கொரோனா தொடருக்குள் நுழைந்து விட்டதாக கருதுகிறேன்’’ என்றார் டு பிளிஸ்சிஸ்.
    Next Story
    ×