search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதமடித்த ரோரி பர்ன்ஸ்
    X
    சதமடித்த ரோரி பர்ன்ஸ்

    நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 275 ரன்னில் ஆல் அவுட்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பெர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
    லண்டன்:

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது.

    இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் சரிவை தடுத்து நிறுத்தினர்.

    இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 

    இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜோ ரூட் 42 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஒல்லி போப் 22 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஒல்லி ராபின்சன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    6 விக்கெட் வீழ்த்திய டிம் சவுத்தி

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 132 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 101.1ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, 103 ரன்கள் கூடுதல் பெற்ற நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

    நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. லாதம் 30 ரன்னுடனும், நீல் வாக்னர் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை நியூசிலாந்து அணி 165 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
    Next Story
    ×