search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து வேகப்பந்து வீரர் போல்ட்
    X
    நியூசிலாந்து வேகப்பந்து வீரர் போல்ட்

    இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைப்போம்- நியூசிலாந்து வீரர் போல்ட் விருப்பம்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் புதிய வரலாறு படைக்கும் தகுதி நியூசிலாந்துக்கு உள்ளது என்று நம்புகிறேன் என்று நியூசிலாந்து வீரர் போல்ட் கூறினார்.
    லண்டன்:

    முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தநிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீரர் போல்ட் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    நியூசிலாந்து அணி சொந்த மண்ணிலும், உலகின் பல இடங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதை பார்க்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் புதிய வரலாறு படைக்கும் தகுதி நியூசிலாந்துக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்.

    இந்த போட்டியில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் மும்பை அணிக்காக மீண்டும் களம் இறங்குவேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பு நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

    Next Story
    ×