என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 போட்டிகளில் அதிக வெற்றி - டோனியை முந்திய அஸ்கார் ஆப்கான்
Byமாலை மலர்20 March 2021 11:22 PM GMT (Updated: 20 March 2021 11:57 PM GMT)
சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக வெற்றிகளைக் குவித்த வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் டோனி முதல் இடம் வகித்து வந்தார்.
புதுடெல்லி:
சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக வெற்றிகளைக் குவித்த கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி முதல் இடத்தில் இருந்து வந்துள்ளார். அவர், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்து வரும் இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2வது இருபது ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால், அந்த அணியின் கேப்டன் அஸ்கார் ஆப்கான் 41 வெற்றிகளுடன் தோனியின் சாதனையை சமன் செய்து இருந்துள்ளார்.
தொடர்ந்து நேற்று நடந்த 3வது இருபது ஓவர் போட்டியில் ஜிம்பாப்வேவை 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்த வெற்றியால், அஸ்கார் ஆப்கான் கூடுதலாக ஒரு வெற்றியைப் பெற்று 42 வெற்றிகளுடன் தோனியை முந்தியுள்ளார்.
3வது இடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் (33 வெற்றிகள்) உள்ளார். பாகிஸ்தானின் சர்ப்ராஸ் அகமது (29 வெற்றிகள்) 4வது இடத்திலும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி (27 வெற்றிகள்) 5வது இடத்திலும் உள்ளனர்.

Next Story
×