என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அணி வீரர்கள்
    X
    தமிழக அணி வீரர்கள்

    20 ஓவர் போட்டியில் தமிழ்நாடு சாம்பியன்: சுழற்பந்து வீரர்களால் வெற்றி பெற்றோம் - பயிற்சியாளர் சொல்கிறார்

    சையத் முஷ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றதற்கு சுழற்பந்து வீரர்களால் தான் காரணம் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சையத் முஷ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் பரோடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்த போட்டி தொடரில் தமிழக அணி லீக் உள்பட 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதித்தது. 2-வது முறையாக தமிழகத்துக்கு கோப்பை கிடைத்தது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது.

    இதுகுறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் டி.வாசு கூறும்போது, நீண்ட பயணத்துக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளோம். ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களால் வெற்றி பெற்றோம். சுழற்பந்துதான் எங்களது பலம் என்றார்.

    Next Story
    ×