search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஹானே
    X
    ரஹானே

    கேப்டன் பொறுப்பில் தோல்வியடையாத சிங்கமாக வலம் வரும் ரஹானே

    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தோல்வியையே சந்திக்காத சிங்கமாக ரஹானே வளம் வருகிறார். ஐந்து போட்டியில் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். ரஹானே துணைக் கேப்டனாக உள்ளார். அடிலெய்டு டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தபின்னர், விராட் கோலி நாடு திரும்பினார். இதனால் ரஹானே கேப்டனாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

    அடிலெய்டு டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் கேப்டன் பதவியை வாங்கிய ரஹானே என்ன செய்யப்போகிறார்? என அனைவரும் சந்தேகத்துடன் பார்த்தனர்.

    ஆனால் ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் ரஹானே ஆஸ்திரேலியா அணியையும், வங்காளதேச அணியையும் தோற்கடித்து இருந்தார். அந்த தன்னம்பிக்கையுடன் களம் இறங்கினார்.

    மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இன்றுடன் முடிவடைந்த பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் வென்றது.

    இதன்மூலம் ஐந்து போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரஹானே 4-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளார். ஆகவே, கேப்டன் பொறுப்பில் தோல்வியை சந்திக்காத சிங்கமாக வலம் வருகிறார் ரஹானே.
    Next Story
    ×