என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் சூப்பர் லீக்: குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் கிறிஸ் கெய்ல்
Byமாலை மலர்10 Jan 2021 4:24 PM GMT (Updated: 10 Jan 2021 4:24 PM GMT)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெய்ல், டாம் பாண்டன் ஆகியோரை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி பிப்ரவரி 20-ந்தேதி முதல் மார்ச் 22-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டனையும் எடுத்துள்ளது. இவர்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னும் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் இருந்து முல்தான் சுல்தான் அணிக்கு மாறியுள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியை இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், டேவிட் மில்லரை பெஷாவர் ஷல்மி அணியும் ஏலம் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் முகமது நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை பெஷாவர் ஷல்மி அணி தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் ஆல்-ரவுண்டர் டேன் கிறிஸ்டியன், ஷெர்பேன் ரூதர்போர்டு ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
Next Story
×