என் மலர்
செய்திகள்

மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி
மயங்க் அகர்வால் அவுட், விஹாரிக்கு இடம்: சிட்னி மைதானத்தில் 2-வது வெற்றி கிடைக்குமா?
சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். சைனி இடம்பிடித்துள்ளார்.
சிட்னி மைதானத்தில் இந்திய அணி 12 டெஸ்டில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
1978-ம் ஆண்டு பிஷன் சிங் பெடி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 டெஸ்டில் தோற்றது. 6 போட்டி டிரா ஆனது. 42 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி மைதானத்தில் ரகானே தலைமையிலான இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
101-வது மோதல்
இரு அணிகளும் நாளை மோதுவது 101-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 100 டெஸ்டில் இந்தியா 29-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 போட்டிகள் டிரா ஆனது. ஒரு டெஸ்ட் டை ஆனது.
சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுகம் ஆகிறார். மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் காயம் அடைந்துள்ளதால் விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Next Story






