search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீன் எல்கர்
    X
    டீன் எல்கர்

    இலங்கையை 157 ரன்னில் சுருட்டிய தென்ஆப்பிரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 148/1

    செஞ்சூரியன் டெஸ்டில் இலங்கையை முதல் இன்னிங்சில் 157 ரன்னில் சுருட்டிய தென்ஆப்பிரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் குசால் பெரேராவை (60) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 8-வது வீரரான வனிந்து ஹசரங்கா 29 ரன்களும், 9-வது வீரர் சமீரா 22 ரன்களும் அடிக்க இலங்கை முதல் இன்னிங்சில் 157 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் அன்ரிச் நேர்ஜே 6 விக்கெட்டும், முல்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர், எய்டன் மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் டீன் எல்கர் அதிரடியாக விளையாடினார். அடுத்து வந்த வான் டெர் டுஸ்சென் டீன் எல்கருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த விக்கெட்டை இலங்கை பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

    இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்துள்ளது. இன்னும் 9 ரன்களே பின்தங்கியுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் மிகப்பெரிய முன்னிலையைப் பெற வாய்ப்புள்ளது.

    டீன் எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×