என் மலர்
செய்திகள்

ரோஸ் பேட்ஸ்
விதியை பின்பற்றுங்கள், இல்லையெனில் வராதீர்கள்: இந்திய அணிக்கு குயின்ஸ்லாந்து மந்திரி பதில்
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மீண்டும் கோரன்டைன் விதிமுறையை பின்பற்ற இந்திய அணி விரும்பாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா சென்றபோது 14 நாட்கள் கோரன்டைனில் இருந்தது. அதன்பின் கிரிக்கெட்டில் விளையாடியது.
3-வது போட்டி சிட்னியில் நடக்கிறது. சிட்னி போட்டி முடிந்த பின்னர், 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம் குயின்ஸ்லாந்து மைதானத்தில் நடக்க இருக்கிறது.
தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் கோரன்டைன் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்திய அணி துபாயில் 14 நாட்களும், அதன்பின் ஆஸ்திரேலியா சென்ற பின்னர் அங்கு 14 நாட்களும் கோரன்டைனில் இருந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து தொடரை முடித்து சொந்த நாடு திரும்புவதற்கு முன், இன்னொரு முறை கோரன்டைனில் இருக்க இந்திய அணி விரும்பவில்லை. இதனால் போட்டியை சிட்னியிலேயே நடத்த இந்திய அணி வற்புறுத்தியுள்ளது.
இந்த நிலையில் குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணி கோரன்டைன் விதிமுறையை எளிதாக்க கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் குயின்ஸ்லாந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிடில், இங்கே வரவேண்டாம்’’ என்றார்.
Next Story






