search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்குலிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்
    X
    கங்குலிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

    சவுரவ் கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்பட்டுள்ளது - மருத்துவர் தகவல்

    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க (பிசிசிஐ) தலைவராக செயல்பட்டு வருகிறார்.  மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். 

    இதற்கிடையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சவுரவ் கங்குலிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர். அஃப்தாப் கான் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டாக்டர் கூறியதாவது:-

    சவுரவ் கங்குலிக்கு இதயநாள அடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கங்குலியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் அடுத்த 24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்.

    அவர் முழு நினைவுடன் உள்ளார். கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்காக தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    என்றார்.   
    Next Story
    ×