என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்னே - ரஹானே
    X
    வார்னே - ரஹானே

    பாக்சிங்டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்று - ரஹானேவுக்கு வார்னே பாராட்டு

    பாக்சிங்டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்றாகும் என ரஹானேவின் பேட்டிங்கை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே பாராட்டி உள்ளார்.

    மெல்போர்ன்:

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி “பாக்சிங்டே” என்று அழைக்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் தொடங்கிய 2-வது போட்டியான பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் ரஹானே மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவரது 12-வது சதம் இதுவாகும். 112 ரன்களை எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.

    மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரஹானே பெற்றார். இதற்கு முன்பு தெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் சதம் அடித்து இருந்தார்.

    இந்த நிலையில் ரஹானேவின் பேட்டிங்கை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஹானேவின் சதம் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்படும். நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் இதுவும் ஒன்று என்று கடந்த விட முடியாது. பாக்சிங் டே டெஸ்ட்டின் சிறந்த, தரமான சதங்களில் இதுவும் ஒன்றாகும்.

    ஆட்டத்தின் போக்கு, ஆடுகள தன்மை, உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு என அனைத்துடன் கடுமையாக போராடி ரஹானே இந்த சதத்தை அடித்தார். இதனால் தான் இதை சிறந்த சதங்களில் ஒன்றுஎன்று கருதுகிறேன்.

    ரஹானேவின் சிறந்த ஆட்டத்துக்கு இது ஒரு உதாரணமாகும். கோலி இல்லாத நிலையில் அணியின் ஆட்டத்தை பார்த்து அவரே அசந்து போய் இருப்பார்.

    இவ்வாறு வார்னே கூறினார்.

    Next Story
    ×