என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஷன் சிங் பெடி
    X
    பிஷன் சிங் பெடி

    அருண் ஜெட்லிக்கு சிலை: பிஷன் சிங் பெடி எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்

    டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மறைந்த அருண் ஜெட்லிக்கு சிலை வைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஷன் சிங் பெடி உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
    இந்தியாவில் புகழ் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவும் ஒன்று. இந்த மைதானத்தில் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-மந்திரியுமான அருண் ஜெட்லிக்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 6 அடி சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் பிஷன் சிங் பெடி ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் கேலரிக்கு வைக்கப்பட்டுள்ள எனது பெயரை நீக்கிவிடுங்கள். என்னை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவித்து கொள்கிறேன் என டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
    Next Story
    ×