search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன் பட்டம் வென்ற டேனில் மெத்வதேவ்
    X
    சாம்பியன் பட்டம் வென்ற டேனில் மெத்வதேவ்

    ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று - டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்

    உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமினிக் தீமை வீழ்த்தி டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    லண்டன்:

    டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை டொமினிக் தீம் 6-4 என வென்றார்.

    ஆனாலும் இரண்டாவது செட்டில் மெத்வதேவ் அதிரடியாக ஆடினார். டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை மெத்வதேவ் 7-6 என தன்வசப்படுத்தினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், டேனில் மெத்வதேவ் 4-6, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 3 வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியைப் பெற மெத்வதேவுக்கு 2 மணி 43 நிமிடங்கள் தேவைப்பட்டது. 

    சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற மெத்வதேவ் உலகின் முதல் 3 நிலை வீரர்களை இந்த தொடரில் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×