என் மலர்

  செய்திகள்

  சென்னை சூப்பர் கிங்ஸ்
  X
  சென்னை சூப்பர் கிங்ஸ்

  2010-க்கும் 2020-க்கும் அப்படியே ஒற்றுமை: அடித்து நொறுக்கி சாம்பியன் ஆகுமா சிஎஸ்கே?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2010 சீசனில் சென்னை அணி முதல் பாதி தொடரில் படுபதாளத்தில் இருந்து, பின்னர் வீறுகொண்டு எழுந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
  பிளே ஆஃப்ஸ சுற்று என்றாலே அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கட்டாயம் இடமுண்டு. ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தில் வேகம் இல்லை.

  சீசனின் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

  இதனால் ஒருபக்கம் ரசிகர்கள் துவண்டு கிடக்கும் நிலையில், மறுபக்கம் சென்னை அணி இதற்கு முந்தைய சீசனில் எப்படியெல்லாம் கம்பேக் கொடுத்தது என்பதை குறித்து ஆராய ரசிகர்கள் தொடங்கிவிட்டனர்.

  அப்படி ஆராய்ந்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010-ல் பாதி தொடரில் எப்படி இருந்ததோ, அதே நிலையில் அப்படியே உள்ளது. அதுமட்டுமல்ல முதல் இடத்தை பிடித்திருந்த அணியும் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது.

  2010 சீசனுக்கும் 2020 சீசனுக்கும் அப்படியே ஒற்றுமை உள்ளது என்பதால் இந்த முறை சிஎஸ்கே-விற்குத்தான் கோப்பை என அதீத நம்பிக்கையில் உள்ளனர்.

  2010 சீசன் சென்னை அணிக்கு 3-வது தொடர். 2020 இரண்டு கால தடைக்குப்பின் 3-வது தொடர். 2010-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தை பிடித்திருந்தது. தற்போதும் பஞ்சாப் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.

  2010-ல் இரண்டு அணிகள் 6 புள்ளிகள் பெற்றிருந்தன. தற்போது ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பெற்றுள்ளன.

  இரண்டு வெற்றிகளும் வெளி மைதானத்தில் கிடைத்ததுதான். தற்போதும் அதேபோல் கிடைத்து்ளளது. 2010-ல் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தில் இருந்தது. தற்போதும் மும்பை இந்தியன்ஸ் அணிதான் முதல் இடத்தில் உள்ளது.

  2010-ல் 2-வது பாதி சீசனில் வீறுகொண்டு எழுந்து 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. பின்னர் அரையிறுதி, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

  இதை வைத்து பாரக்கும்போது சென்னை அணிக்கு வாய்ப்பு இருக்கிறது ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். 8-வது போட்டியில் ஐதராபாத் அணியை சிஎஸ்கே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×