என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் மிஸ்ரா
    X
    அமித் மிஸ்ரா

    ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் அமித் மிஷ்ரா

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா விளையாடி வந்தார். கொல்கத்தா அணிக்கெதிராக பந்து வீசியபோது, பேட்ஸ்மேன் அடித்த பந்தை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது வலது கை மோதிர விரலில் பந்து பலமாக தாக்கியது.

    இதனால் 2 ஓவர்களோடு வெளியேறினார். மிஷ்ராவுக்கு தசை நார் கிழிந்துள்ளதால் எதிர்வரும் போட்டிகளில் விளையாடாத நிலை ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    Next Story
    ×