என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்ஷ்
    X
    வால்ஷ்

    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வால்ஷ் நியமனம்

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வால்ஷ், அந்நாட்டு பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வால்ஷ். டெஸ்ட் கிரிக்கெட்டில் 519 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும், ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் உறுப்பினராக கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    இவர் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 வரை அப்பதவியில் நீடிப்பார். ஐசிசி-யின் 50 ஓவர் உலக கோப்பை, டி20 உலக கோப்பை தொடரிலும் பயிற்சியாளராக செயல்படுவார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டில் 2013 முதல் 2016 வரை தேர்வாளராகவும், ஜூனியர் அணியின் மானேஜராகவும் இருந்துள்ளார்.
    Next Story
    ×