என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்த்ரே ரஸல்
    X
    அந்த்ரே ரஸல்

    கரீபியன் பிரிமீயர் லீக்: அந்த்ரே ரஸல் அதிரடி வீண்- டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 19 ரன்னில் வெற்றி

    அந்த்ரே ரஸல் 23 பந்தில் 4 சிக்ஸ், ஐந்து பவுண்டரியுடன் 50 ரன்கள் அடித்த போதிலும், அவருடைய அணி 19 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
    கரீபியன் பிரிமீயர் லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜமைக்கா தல்லாவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய டிரி்ன்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சுனில் நரைன் 11 பந்தில் 29 ரன்கள் அடித்தார். கொலின் முன்றோ 54 பந்தில் 65 ரன்களும், கேப்டன் பொல்லார்டு 16 பந்தில் 33 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் வால்டன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கிளென் பிலிப்ஸ் 31 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த பிளாக் வுட் 12 ரன்களும், நிருமா போனர் 26 ரன்களும் சேர்த்தனர். 6-வது வீரராக களம் இறங்கிய அந்த்ரே ரஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 50 ரன்கள் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    இறுதியில் ஜமைக்கா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிறகு 165 ரன்கள் மட்டுமே அடித்ததால் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
    Next Story
    ×