என் மலர்
செய்திகள்

ஐபிஎல் 2020
2020 சீசனுக்கு மட்டும் ட்ரீம் லெவன் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ட்ரீம் லெவன் 2020 சீசனுக்கு மட்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லடாக் மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் மேலோங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியது.
இதனால் ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு விண்ணப்பம் கோரி வெற்றி பெற்றது. பிசிசிஐ 2021 மற்றும் 2022 சீசனுக்கும் சேர்த்தும் ஏலம் கேட்க ட்ரீம் லெவன்-ஐ வலியுறுத்தியது. ஆனால் வருடத்திற்கு 240 கோடி ரூபாய்க்கு மேல் ட்ரீம் லெவன் வழங்க மறுத்துவிட்டது.
ஆனால் வருடத்திற்கு 440 கோடி ரூபாய் விவோவிடம் இருந்து வாங்கிய பிசிசிஐ 240 கோடி ரூபாயை ஏற்க ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால் இந்த வருடத்திற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் மட்டும் ட்ரீம் லெவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Story






