என் மலர்
செய்திகள்

எம்.எஸ். டோனி
எம்.எஸ். டோனி 19.29 நேரத்தை குறிப்பிட்டது ஏன்?
மகேந்திர சிங் டோனி தனது ஓய்வு முடிவு குறித்து வெளியிடும்போது 19.29 நேரத்தை குறிப்பிட்டது குறித்து சிஎஸ்கே சிஇஓ விவரித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். 2015-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, நேற்று இந்தியாவின் 74-வது சுதந்திரன தினம் அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவர் தனது ஓய்வு அறிவிப்பில் ‘‘அதிகப்படியான உங்கள் அன்பிற்கும், கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு தெரிவித்ததற்கும் நன்றி எனத் தெரிவித்திருந்தார். 19.29 மணி நேரத்தில் இருந்து என்னை ஓய்வு பெற்றவராக கருதலாம்’’ என்று தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த எம்எஸ் டோனிக்கு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து துறைகளிலும் இருந்து புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.
ஆனால் இன்ஸ்டாகிராமில் அவர் ஏன் 19.29 நேரத்தை தேர்வு செய்தார் என்பது எல்லோருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி வி்ஸ்வநாதனுக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனிடம் இருந்து போன் கால் வந்த பின்னர்தான் 19.29 நேரம் வெளிவந்துள்ளது.
மும்பை மிர்ரரில் டோனி ஓய்வு குறித்து எழுதியுள்ளன. இதுகுறித்து அறிந்த ஸ்ரீனிவாசன் உடனடியாக காசி விஸ்வநாதனிடம் போன் செய்து டோனி குறித்த வதந்தி உண்மையா? எனக் கேட்டுள்ளார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் வீரர்கள் அறைக்குச் சென்று, டோனியிடம் ஸ்ரீனிவாசன் போனில் இருக்க இதுகுறித்து காசி விஸ்வநாதன் கேட்டுள்ளார். அப்போது ஆம் என எம்எஸ் டோனி கூறியுள்ளார்.
எப்போது இந்த முடிவு எடுத்தீர்கள்? என்ற காசி விஸ்வநாதன் கேட்டுள்ளார். அப்போது டோனி, 19.29 மணிக்கு. இன்ஸ்டாகிமில் எனத் தெரிவித்துள்ளார்.
டோனி இந்த நேரத்தில்தான் அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘பூமியின் தெற்குப்பகுதியின் பெரும்பாலான நாடுகளில் இந்த நேரத்தில்தான் சூரியன் மறையும். அதனால்தான் அவர் அந்த நேரத்தை தேர்வு செய்தார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
இதுகுறித்து எம்.எஸ். டோனி தெரிவித்தால் மட்டுமே சரியான தெளிவு கிடைக்கும்.
Next Story






