search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபக் சாஹர்
    X
    தீபக் சாஹர்

    ஐபிஎல் ஒத்திவைப்பால் காயத்தில் இருந்து குணமாக கூடுதல் நேரம் கிடைத்தது: தீபக் சாஹர் சொல்கிறார்

    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது காயத்தில் இருந்த குணமாக வழிவகுத்தது என சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகம்தான்.

    இந்த ஒத்திவைப்பால் காயத்தில் இருந்து மீண்டுவர முடிந்தது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

    கடந்த டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும்போது இவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை மேற்கொண்ட சாஹர், தற்போதுதான் குணமடைந்துள்ளார். ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியிருந்தால் சில போட்டிகளை தவற விட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிற்கும். ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்த நிலைமை ஏற்படவில்லை என்றார்.

    இதுகுறித்து தீபக் சாஹர் கூறுகையில் ‘‘மீண்டும் பந்து வீசுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். தற்போதைய எண்ணம் எல்லாம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதுதான். நினைத்த விஷயங்கள் எல்லாம் அப்படியே நடைபெறுவது நம்மிடம் இல்லை. இந்த நேரத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதில் கவனம் செலுத்தினேன்.

    புதிய விஷங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். மேலும் எனது உடற்தகுதியில் கவனம் செலுத்தினேன். தற்போது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு கூடுதல் நேரம் கிடைத்தது. ஐபிஎல் மார்ச் 29-ந்தேதி தொடங்கியிருந்தால் நான் சில போட்டிகளை தவறவிட்டிருப்புன்’’ என்றார்.
    Next Story
    ×