search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்கி இந்தியா
    X
    ஆக்கி இந்தியா

    பிரதமர் நிவாரண நிதிக்கு மேலும் ரூ.75 லட்சம் வழங்கியது, ஆக்கி இந்தியா

    பிரதமர் நிவாரண நிதிக்கு மேலும் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது நேற்று அறிவித்தார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் நாடு பொருளாதார ரீதியாகவும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது. 

    எதிர்பாராத இந்த இன்னலை தாங்க எல்லா தரப்பினரும் அரசுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை கடந்த 1-ந் தேதி ஆக்கி இந்தியா அமைப்பு வழங்கி இருந்தது. 

    இந்த நிலையில் மேலும் ரூ.75 லட்சம் (மொத்தம் ரூ.1 கோடி) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது நேற்று அறிவித்தார். செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

    இதேபோல் இந்திய கோல்ப் வீரர் அனிர்பன் லஹிரி ரூ.7 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×