என் மலர்
செய்திகள்

ஆஷிஷ் குமார்
ஒலிம்பிக் ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர் ஆஷிஷ் காலிறுதிக்கு முன்னேற்றம்
கிர்கிஸ்தானைச் சேர்ந்த 4-ம் நிலை வீரரை 5-0 என வீழ்த்தி ஒலிம்பிக் ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை காலிறுதிக்கு முன்னேறினார் ஆஷிஷ்.
ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான 75 கிலோ எடைபிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிஷ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த உமுர்பெக் பெக்சைட்டை எதிர்கொண்டார். இதில் ஆஷிஷ் குமார் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் இந்தோனேசியைச் சேர்ந்த மைக்கேல் ரோபர்ட் முஸ்கிட்டாவை எதிர்கொள்கிறார். காலிறுதியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.

Next Story