search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாய்னா நேவால்
    X
    சாய்னா நேவால்

    பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ்: சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் ஜெர்மனைச் சேர்ந்த யோன்னே லீயை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-16, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரனோய் 18-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
    Next Story
    ×