search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்வித்தை பயிற்சியின்போது வீராங்கனை காயம்
    X
    வில்வித்தை பயிற்சியின்போது வீராங்கனை காயம்

    அசாமில் வில்வித்தை பயிற்சியின்போது வீராங்கனையின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு

    அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது வீராங்கனையின் தோள்பட்டையில் அம்பு பாய்ந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    அசாம் மாநிலத்தில் சபுயா என்ற இடத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அசாம் மாநிலத்திற்கான மையம் மைந்துள்ளது.

    இங்கு அம்மாநிலத்தில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, எதிர்பாராத விதமாக ஷிவாஞ்சினி கோஹைகன் என்ற சிறுமியின் தோள்பட்டை பகுதியை துளைத்தது.

    இதனால் அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நேற்று உயர்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

    வில்லிவித்தை பயிற்சியாளர் மார்சி என்பவர் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அவர் இல்லாத நிலையில் இந்த பயிற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×