என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாம் சிப்லி
    X
    டாம் சிப்லி

    கேப் டவுன் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவுக்கு 438 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து

    சிப்லியின் சதத்தாலும், பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டத்தாலும் தென்ஆப்பிரிக்காவுக்கு 438 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் சேர்த்தன.

    46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டாம் சிப்லி சிறப்பாக விளையாட நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி 85 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிப்லியுடன் பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். பென் ஸ்டோக்ஸ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 47 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    பென் ஸ்டோக்ஸ்

    சிப்லி 133 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    Next Story
    ×