search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் ரோகித் சர்மா
    X
    அஸ்வின் ரோகித் சர்மா

    இந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறல்

    இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசம் 115 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    • இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள்
    •  அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்
    •  மொமினுல் ஹக் 37 ரன்னில் ஆட்டமிழப்பு

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் (விக்கெட் கீப்பரையும் சேர்த்து), 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இதேபோல் விக்கெட் கீப்பரிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விர்த்திமான் சகா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ்.

    வங்காளதேசம்: மொமினுல் ஹக் (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், ‌ஷத்மன் இஸ்லாம், முகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம், மெஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், மெகிதி ஹசன், தஜூல் இஸ்லாம், அபுஜெயத், எபாடத் உசேன்.

    இம்ருல் கெய்சும், ‌ஷத்மன் இஸ்லாமும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் தொடக்க வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர்.

    இம்ருல் கெய்ஸ் 6 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும், ‌ஷத்மன் 6 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த மிதுன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் 31 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் மொமினுல் ஹக் உடன் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இதனால் மதியம் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 22 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    முஷ்பிகுர் ரஹிம்

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் இன்னிங்சை சிறப்பாக தொடங்கினர். அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும் போது மொமினுல் ஹக் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா 10 ரன்னில் அஸ்வின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    இதனால் 115 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்துள்ளா்ர. வங்காளதேசம் 48 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு  ரன்கள்122 எடுத்து விளையாடி வருகிறது. முஷ்பிகுர் ரஹிம் 42 ரன்னுடன் விளையாடி வருகிறார்.
    Next Story
    ×