என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷ்லே பார்ட்டி
    X
    ஆஷ்லே பார்ட்டி

    டபிள்யூடிஏ பைனல்ஸ்: எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லே பார்ட்டி

    சீனாவில் நடைபெற்ற டபிள்யூடிஏ பைனல்ஸ் இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
    டென்னிஸ் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 8 வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷின்சென்னில் நடைபெற்றது.

    குரூப் லீக், அரையிறுதிக்குப் பின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி, 8-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா ஆகியோர்  இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    ஆஷ்லே பார்ட்டி

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஆஷ்லே பார்ட்டி ஆதிக்கம்  செலுத்தி வந்தார். முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஆஷ்லே பார்ட்டியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி அவர், சாம்பியன் பட்டம் வென்றார்.
    Next Story
    ×