என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஷ்ரப் மோர்டாசா
    X
    மஷ்ரப் மோர்டாசா

    என்னை கொல்ல ஆசைப்படுகிறீர்களா? -பங்களாதேஷ் கேப்டன் அதிரடி பதில்

    பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்டாசா, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு என்னை கொல்ல ஆசைப்படுகிறீர்களா? என அதிரடியாக பதில் கூறியுள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பங்களாதேஷ்- இந்தியா அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்திய அணி, 7 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

    பங்களாதேஷ் அணி, 3 முறை வெற்றி, 3 முறை தோல்வி, 1 ஆட்டம் முடிவின்றி 7 புள்ளிகளுடன் உள்ளது. மேலும் இந்த அணி, அரையிறுதிக்கு நுழைய 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் உள்ளது.

    இந்தியா-பங்களாதேஷ் அணிகள்

    இதன்காரணமாக இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் மஷ்ரப் மோர்டாசா நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

    அப்போது ஒரு செய்தியாளர், அடுத்த 10-15 வருடங்களில் உங்களை பிரதமராக பார்க்கலாமா? என கேட்டுள்ளார். அதற்கு மோர்டாசா, அவரை பார்த்து ‘ஏன்? என்னை கொல்ல ஆசைப்படுகிறீர்களா?’ என சிரித்தபடியே அதிரடியாக கேட்டுள்ளார்.

    பின்னர் பேசிய அவர், ‘நாங்களும் மனிதர்கள்தான். வரம்பு மீறி வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிகக்கடுமையாக ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கிரிக்கெட் வீரர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    போட்டியின்போது இரு நாட்டு அணிகளும் வெற்றிப் பெறத்தான் போராடுவோம். ரசிகர்கள் நல்ல முறையில் ஆதரவு அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இவர் பங்களாதேஷ் நாட்டின் எம்பியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




    Next Story
    ×