என் மலர்
செய்திகள்

லியாம் பிளங்கெட் நகத்தால் பந்தை சேதப்படுத்தினாரா?: வீடியோ வெளியானதால் சர்ச்சை
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பந்தை சேதப்படுத்தினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது. பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.
தொடக்க வீரர் பகர் ஜமான் சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதியில் 361 ரன்கள் குவித்து 12 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பந்தை விரல் நகத்தால் சுரண்டியது தற்போது வீடியோவில் தெரியவந்துள்ளது. பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை என்றால், சில வீரர்கள் பந்தை சேதப்படுத்துவார்கள். அப்படி என்றால் பந்து ஒரு பக்கம் தேய்ந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இதனால் ப்ளங்கெட் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக இப்படி செய்திருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பந்தை சுரண்டிய பின் பந்து வீசும்போது, ஒருபக்கம் பந்து மிகவும் சேதமாகியிருந்தது தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஒருவேளை அந்த வீடியோவை பார்த்து விசாரணை மேற்கொண்டால் ப்ளங்கெட் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கி தடைபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Errr....What's going on here? Did Liam Plunkett just scratch the ball with his finger nails? Please investigate this @ICC@TheRealPCB@ECB_cricket@aaliaaaliya@Asharzaidi78@YasirAliHashmi1@AhmerNajeeb@msarosh@ArfaSays_@XeeshanQayyum@BasitSubhani@emclub77@iNabeelHashmipic.twitter.com/fSEUPdzCBT
— H Studio (@Hstudio18) May 12, 2019
Next Story