என் மலர்
செய்திகள்

குணவர்த்தனே - ஜோய்சா
கிரிக்கெட் சூதாட்ட புகார் - இலங்கை முன்னாள் வீரர்கள் ஜோய்சா, குணவர்த்தனே இடைநீக்கம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் நுவான் ஜோய்சா, அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோர் சூதாட்ட புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துபாய்:
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பேட்ஸ்மேன் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் லீக் போட்டியில் பங்கேற்ற அவர்கள் இருவர் மீதும் எழுந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான புகார் என்ன? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
Next Story






