என் மலர்
செய்திகள்

ஐபிஎல் தொடரில் விளையாட மலிங்காவுக்கு அனுமதி அளித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மலிங்கா, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. #MI #IPL2019
இலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணி டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால் தகுதிச் சுற்றில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இதற்காக இலங்கை அணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆகவே, உடனடியாக அவர் மும்பை அணியில் இணைய உள்ளார்.
அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மலிங்கா இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story