search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தமிம் இக்பால் 126 ரன்கள் அடித்தபோதும், வங்காளதேசம் 234-ல் ஆல்அவுட்
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தமிம் இக்பால் 126 ரன்கள் அடித்தபோதும், வங்காளதேசம் 234-ல் ஆல்அவுட்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 234 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 126 ரன்கள் குவித்தார். #NZvBAN
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தமிம் இக்பால், ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்து கொண்டிருந்த நிலையிலும், மறுமுனையில் தமிம் இக்பால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 128 பந்தில் 21 பவுண்டரி, 1 சிக்சருடன் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    தமிம் இக்பால் ஆட்டமிழக்கும்போது வங்காளதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் விக்கெட் மளமளவென சரிய 234 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் 5 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து இன்றைய முதல் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் அடித்துள்ளது. ராவல் 51 ரன்னுடனும், டாம் லாதம் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×