search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ரிசர்வ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம்: பீல்டிங் பயிற்சியாளர்
    X

    உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ரிசர்வ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம்: பீல்டிங் பயிற்சியாளர்

    உலகக்கோப்பைக்கு தயாராக ரிசர்வ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம் என்று பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். #NZvIND
    இந்திய அணி கடந்த ஓராண்டாக வெளிநாட்டில் விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இங்கிலாந்தில் மட்டுமே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது.

    முன்னணி வீரர்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி இன்னும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது.

    இந்நிலையில் ரிசர்வ் வீரர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக அணி வெற்றி பெறுவதை எல்லோரும் விரும்புவார்கள். வெற்றிப் பயணத்தில் இருந்து பின்வாங்க யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், உலகக்கோப்பைக்கு முன் ஏழு போட்டிகள் மட்டுமே உள்ளதால் ரிசர்வ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியமாகும்.

    முன்னணி வீரர்கள் விளையாடி கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வீரர்களுக்கு போதுமான அளவு நேரம் கொடுக்காத நிலையில் முக்கியமான உலகக்கோப்பை தொடரில் அவர்களை விளையாட வைக்கும் சூழ்நிலை இருக்கக்கூடாது. இதைப்பற்றி அணி நிர்வாகம் சிந்திக்கும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

    இங்கிலாந்தில் ஜூன் மாதம் நிலவும் வானிலைக்கு நிகரான இடம் நியூசிலாந்தைவிட வேறேதும் இருக்க முடியாது. அதனால் ரிசர்வ் வீரர்களுக்கு இங்கே வாய்ப்பு வழங்கி சிறப்பாக நிலையை உருவாக்க முயற்சி செய்வோம்’’ என்றார்.
    Next Story
    ×