search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்
    X

    எந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்

    எந்த இடத்தில் களம் இறக்க அணி விரும்பினாலும், மகிழ்ச்சியாக களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார். #AUSvIND #MSDhoni
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. டோனி 87 (அவுட்இல்லை), கேதர் ஜாதவ் (61 அவுட்இல்ல), விராட் கோலி (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    விராட் கோலியுடன் இணைந்து 54 ரன்கள் சேர்த்த டோனி, கேதர் ஜாதவ் உடன் இணைந்து 121 ரன்கள் குவித்தார். மூன்று போட்டியிலும் அரைசதம் விளாசிய டோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    முதல் இரண்டு போட்டிகளில் 5-வது வீரராக களம் இறங்கிய டோனி, இந்த ஆட்டத்தில் 4-வது வீரராக களம் இறங்கினார். அணி எந்த இடத்தில் களம் இறங்க விரும்புகிறதோ, அந்த இடத்தில் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து டோனி கூறுகையில் ‘‘நம்பர் 4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே. ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது. 14 வருடத்திற்குப் பிறகு நான் 4-வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன். அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல இயலாது.

    இன்று விளையாடிய மெல்போர்ன் பிட்ச் ‘ஸ்லோ’வானது. ஆகவே, விரும்பிய போதெல்லாம் ஹிட் ஷாட் அடிப்பது கடினம். இதை கடைசி வரை கடைபிடிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்பது முக்கியம் என்று நினைத்தேன். ஏனென்றால், முக்கியாமான பந்து வீச்சாளர்கள் அவர்களது 10 ஓவர்களை முடிக்க வேண்டும். கேதர் ஜாதவ், கிரிக்கெட்டிற்கு தொடர்பிள்ளாத அன்ஆர்தோடாக்ஸ் (unorthodox) ஷாட்ஸ் மூலம் பவுண்டரிகள் விளாசினார்’’ என்றார்.
    Next Story
    ×