search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி காக்கின் அபார சதத்தால் பாகிஸ்தானுக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா
    X

    டி காக்கின் அபார சதத்தால் பாகிஸ்தானுக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. டி காக் சதம் விளாசினார். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது.

    77 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் டீன் எல்கர் (5), மார்கிராம் (21) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அம்லா நிலைத்து நின்று விளையாட டி ப்ரூயின் 7 ரன்னிலும், ஹம்சா டக்அவுட்டிலும், பவுமா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 42 ரன்னுடனும், டி காக் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அம்லா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். டி காக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், தென்ஆப்பிரிக்கா அணி 302 ரன்னாக இருக்கும்போது 129 ரன்கள் விளாசி 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். டி காக் ஆட்டமிழந்ததும் தென்ஆப்பிரிக்கா 303 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை விட 380 ரன்கள் அதிகம் பெற்றது. இதனால்  பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    Next Story
    ×