search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக வீரர் அடிக்கும் ஷாட்டை கேரள வீரர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள்.
    X
    தமிழக வீரர் அடிக்கும் ஷாட்டை கேரள வீரர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள்.

    தேசிய சீனியர் கைப்பந்து - இறுதிப்போட்டியில் தமிழக அணி

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #NationalVolleyball
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் கேரள அணி 25-18, 25-9, 25-9 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தையும், ரெயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை விரட்டியது. மற்றொரு அரையிறுதியில் தமிழக அணி 25-27, 25-14, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டி, வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பெண்கள் இறுதிசுற்றில் ரெயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NationalVolleyball
    Next Story
    ×