search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வேகப்பந்து வீச்சு அபாரம் - ஆலன்பார்டர் பாராட்டு
    X

    இந்திய வேகப்பந்து வீச்சு அபாரம் - ஆலன்பார்டர் பாராட்டு

    இந்திய வேகப்பந்து வீச்சு அபாரம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன்பார்டர் பாராட்டி உள்ளார். #AUSvIND

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. மெல்போர்னில் பெற்ற வெற்றியால் இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது.

    நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க உள்ளது என்றும் வெற்றிக்கு தகுதியான அணி என்றும் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டினர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன்பார்டர் இந்திய அணியை பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

    நம்பர் 1 அணியாக உள்ள இந்தியா தற்போது அதற்கு ஏற்றாற்போல் விளையாடி வருகிறது. அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். அவர்களது ஆட்டத்தை பார்க்க சிறப்பாக இருக்கிறது.

    முன்பு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி திணறி வந்தது. ஆனால் அதிலிருந்து அவர்கள் முன்னேற்றம் அடைய ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்திய அணி நல்ல வேகப்பந்து வீச்சை பெற்று இருப்பதுதான். அற்புதமான வேகப்பந்து குழுவுடன் ஒன்றிணைந்து உள்ளது.

    நான் பார்த்ததிலேயே இதுதான் நல்ல இந்திய வேகப்பந்து வீச்சு குழு. மேலும் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். பேட்டிங்கும் மிகவும் நல்ல நிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாட்டில் உள்ள வேகப் பந்துக்கு சாதகமாக ஆடு களங்களை போன்று இந்தியாவிலும் அமைப்பார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு கவாஸ்கர்- பார்டர் கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND

    Next Story
    ×