search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்கா டெஸ்ட்- வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்னில் வெற்றி- தொடரை 2-0 எனக்கைப்பற்றியது
    X

    டாக்கா டெஸ்ட்- வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்னில் வெற்றி- தொடரை 2-0 எனக்கைப்பற்றியது

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. ஷத்மான் இஸ்லாம் (76), ஷாகிப் அல் ஹசன் (80), லித்தோன் தாஸ் (50), மெஹ்முதுல்லா (136) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் 154 ஓவரில் 508 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோச், வாரிகன், பிஷு, பிராத்வைட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மெஹிது ஹசன் மிராஸ் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 111 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் (10), ஹெட்மையர் (39), டவ்ரிச் (37) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். மெஹிது மிராஸ் மிராஸ் 7 விக்கெட்டும், சாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    397 ரன்கள் பின்தங்கியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பாலோ-ஆன் ஆகி 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மையர் மட்டும் தாக்குப்பிடித்து 92 பந்தில் 9 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 93 ரன்கள் குவித்தார்.


    ஹெட்மையர்

    ரோச் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 213 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கள் சாய்த்த மெஹிது ஹசன் மிராஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை வங்காள தேசம் 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×