search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடை- இந்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கிறது ஆஸ்திரேலியா
    X

    ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடை- இந்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கிறது ஆஸ்திரேலியா

    ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் தடையை விலக்குவது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த வாரம் இறுதி முடிவை எடுக்கிறது. #CA #Warner #Smith
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது வார்னர் என்றும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும் என்று விசாரணையில் தெரிய வந்தது.

    இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் சங்கமும் இவர்களுக்கு ஆதரவாக இருந்து. ஓராண்டு தண்டனையை பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.



    டிசம்பர் 6-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதன்முறையாக இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவிடம் தொடரை இழந்தால் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலியா நினைக்கிறது. இதனால் தண்டனை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் மூன்று பேரின் தடையை நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஸ்மித் மற்றும் வார்னருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×