என் மலர்

  செய்திகள்

  ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி மீண்டும் தோல்வி
  X

  ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி மீண்டும் தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #ISL2018 #ChennaiyinFC
  கவுகாத்தி:

  5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தியது.

  3-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் காலு உச்சே கோல் அடித்தார். 13-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் கொல்கத்தா அணியின் ஜான்சன் தலையால் முட்டி கோலாக்கினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 50-வது கோல் இதுவாகும். 17-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் கார்லோஸ் சலோம் கோல் திருப்பினார். முதல் பாதியில் கொல்கத்தா முன்னிலை வகித்தது.

  பிற்பாதியில் பந்து அதிக நேரம் சென்னை அணியினரின் வசம் சுற்றினாலும் அதிர்ஷ்டம் இல்லை. முடிவில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. எதிரணி கோல் எல்லையை நோக்கி சென்னை அணி வீரர்கள் அடித்த 5 ஷாட்களில் ஒன்றை தவிர மற்றவை வீணானது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை சந்தித்த 4-வது தோல்வி இது. ஒரு ஆட்டத்தில் டிரா கண்டுள்ளது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiyinFC
  Next Story
  ×