என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளையோர் ஒலிம்பிக்- பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெள்ளி வென்றார்
    X

    இளையோர் ஒலிம்பிக்- பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெள்ளி வென்றார்

    இளையோர் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். #YouthOlympics2018
    இளையோர் ஒலிம்பிக் தொடர் அர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது. பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சீனாவின் லீ ஷிபெங்கை எதிர்கொண்டார்.



    இந்தியாவின் லக்‌ஷயா சென் சீன வீரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்பியடைந்தார்.
    Next Story
    ×