search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா டெஸ்ட்- 24 வருட கால மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் உடைக்குமா?
    X

    இந்தியா டெஸ்ட்- 24 வருட கால மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் உடைக்குமா?

    இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 1994-க்குப் பிறகு வெற்றி பெற்றதே கிடையாது. இந்த மோசமான சாதனையை உடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.

    ஒரு காலத்தில், அதாவது 1990-க்கும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணி உச்சக்கட்டத்தில் இருந்தது. அந்த அணியை வீழ்த்த எந்த அணியும் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது வங்காள தேச அணியை விட மோசமான நிலையில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் இந்திய மண்ணில் கடைசியாக 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொகாலியில் நடைபெற்ற டெஸ்டில் 243 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் லாரா, வால்ஷ், ஹார்ல் கூப்பர், ஜிம்மி ஆடம்ஸ், பெஞ்சமின் போன்ற வீரர்கள் இருந்தார்கள்.

    அதன்பின் இந்திய மண்ணில் 8 டெஸ்ட் போட்டியில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் 6 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இரண்டில் டிரா கண்டுள்ளது. இந்த முறையாவது 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் மோசமான சாதனையை உடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்திய மண்ணில் நியூசிலாந்து 1988-ற்குப் பிறகு டெஸ்ட் போட்டியை வென்றது கிடையாது. இலங்கை 1982-ல் இருந்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் இருந்து வெற்றி பெற்றதே கிடையாது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் 3-வது அணியாக திகழ்கிறது.
    Next Story
    ×