search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதற்றத்தை கட்டுப்படுத்தும் அணிக்கே வெற்றி- பாகிஸ்தான் தொடக்க பேட்ஸ்மேன் சொல்கிறார்
    X

    பதற்றத்தை கட்டுப்படுத்தும் அணிக்கே வெற்றி- பாகிஸ்தான் தொடக்க பேட்ஸ்மேன் சொல்கிறார்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது பதற்றத்தை எதிர்கொள்ளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் சமான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் சமான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விரைவில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக்கடியை சிறப்பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளையாட்டு ஆகும். என்னை பொறுத்தவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும்.



    நாங்கள் இந்தியாவை விட சற்று முன்னணியில் இருக்கிறோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது.

    விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிடிலும் இந்திய அணி எங்களுக்கு கடும் சவால் கொடுக்கும். ரசிகர்கள் சிறந்த ஆட்டத்தை கண்டுகளிக்க இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×